Monday 2 January 2012

காதலுடன் (ஆட்டோகிராப்) பாலா (பகுதி 1)

நல்லவன்  என்று பெயர் வைத்து கொண்டு புத்தாண்டு வாழ்த்துகளுடன்... இன்று காதலை பற்றி சொல்ல போகிறேன் ... என் பள்ளி பருவ காதலி பற்றி ...
           பள்ளி பருவத்தில் காதல் என்றால்  என்னவென்றே  எனக்கு   தெரியாது..ஆனால்  மற்ற மாணவர்கள் நான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி என்னை கிண்டல்  செய்யும் வரை (அதன் பிறகும் காதல் பற்றி புரிய எனக்கு  சில வருடங்கள் ஆனது )  
                          
             இந்த  நிகழ்ச்சி நடந்த போது நானும் என் காதலியும் ( என் பாசகார நண்பர்கள் கிண்டல் செய்த மாணவி   ) 8ம் வகுப்பு படித்து கொண்டிருந்தோம்.. நானும் அவளும் அப்போது மாணவ தலைவன், அவள் மாணவிகளின்  தலைவி... (நான் அப்போது நன்றாக படிப்பேன்(இன்று நான் அப்படி இல்லை).. அவளும் தான் )...
               எங்களுக்கு பெரும்பாலும் கணித வகுப்பு மரத்தடி நிழலில் தான்  நடக்கும் ... அந்த மரம் எங்கள் வகுப்பறையின் எதிரில் தான் இருக்கும்.
அன்று வழக்கம் போல் மாணவர்கள் அனைவரும் கணித வகுப்பு நேரத்தில்
நான் குறிப்பிட மரத்தடி நிழலுக்கு  வந்து விட்டார்கள் . எங்களுடைய கணித ஆசிரியை  (அவர்களின் பெயர் திருமதி . கலா)  தலைமை ஆசிரியை அழைத்தார்கள் என்று சென்று விட்டார்கள். செல்வதற்கு முன் எங்களுக்கு இரண்டு கணக்குகளை கொடுத்து விடையை கண்டு பிடித்து வைக்க சொன்னார்கள்.  வழக்கம் போல நானும் அவளும் வகுப்பை கவனிக்க எங்களின் வகுப்பறை படியில் அருக அருக அமர்ந்து அந்த கணக்கிற்கு விடை எழுதி கொண்டிருந்தோம்.. அப்போது அவள் கணக்கில் ஒரு இடத்தில் தவறாக எழுத நான் உடன அவளின் கையை பிடித்து சரியான விடையை எழுதி கொடுத்தேன் .... அவளின் கையை பிடிக்கும் போது எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை..  ஆனால் என் சக நண்பர்கள் அதை கவனித்து விட்டார்கள்....
                   அன்று மதிய உணவு இடைவேளையின் போது மற்ற 
மாணவர்கள் இதை பற்றி என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள். நான் அப்போது அவர்களிடம் அப்படி ஒன்றும் எல்லை என்று பல முறை கூறினேன்.. ஆனால் அவர்கள் கேட்கவில்லை... அவர்களின் கேள்வி தடம் மாறி கிண்டலாக மாறியது. அப்போது ஒருவன் நீ அந்த பெண்ணை காதலிக்கிறியா என்று கேட்டான்..  நான் உடனே இல்லை என்று கூறினேன்..  மற்ற மாணவர்கள் தொடர்ந்து அப்படியே தொடர்ந்து கேட்க நான் பொறுமை இழந்து ஆமாம் நான் அந்த பெண்ணை காதலிக்கிறேன் என்று  கூறி விட்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டேன். 

                     
            இது நாள் வரை என்னுடன் படிக்கும் சக மாணவியாக தெரிந்தவள்  அதன் பிறகு காதலியாக தெரிந்தால்...
நானும் அவளும் 3ம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்து  வருகிறோம் .  பல முறை நான் அவள் அருகில் அமர்திருக்கிறேன். அவள் கையை பிடிதிருக்கிறேன் . வாடி, போடி என்று பல முறை அழைத்திருகிறேன் . அனைத்துக்கும் மேலாக நான் அவளுடன் பல முறை சண்டை போட்டிருகிறேன். எங்களிடையே நடக்கும் சண்டை பெரும்பாலும் படிப்பதில் மட்டும் அல்ல மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும்  தலைமை  தாங்கும் போது ஏற்படும் போட்டியாக இருக்கும்.   அப்படி பல விதங்களில் நானும் அவளும் சண்டை போட்டிருக்கிறோம். ஆனால் சண்டை போடும் போது அவள்  அருகே அமரும் போது அவள் மீது ஏற்படாத ஏதோ ஒன்று எனக்கு  தோன்றியது என் நண்பர்களிடம் ஆமாம் நான் அவளை காதலிக்கிறேன்  என்று சொன்ன போது ....
              அதன் பிறகு  நடந்தவை  அனைத்தும்  இன்று  நினைத்தாலும்  எனக்கு என் வெகுளி தனத்தை நினைத்து சிரிப்பாக வரும்.... அல்லது மலரும் நினைவுகளில் புன்னகை வரும்..
         என் ஆட்டோகிராப்பை மலரும் காதலுடன் அடுத்த இடுகையில்...........
அது வரை ...........
          கண்ணாமுச்சி  விளையாட்டில்   மட்டும் அல்ல 
          காதல்  விளையாட்டில் கூட என்னை பிடித்து விடுகிறாள்
                            அவள் கண்களால்..................


                     

No comments:

Post a Comment